மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங்கை, சஸ்பெண்ட் செய்துள்ள மஹாராஷ்டிரா அரசு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங்கை, சஸ்பெண்ட் செய்துள்ள மஹாராஷ்டிரா அரசு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பரம்வீர் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பரம்வீர் சிங், ஆகஸ்ட் 29 வரை மருத்துவ விடுப்பில் சென்றார்.
விடுப்பு முடிந்தும் பணிக்கு திரும்பாத அவர் தலைமறைவானார். பரம்வீர் சிங்கைக் கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து மும்பை திரும்பிய அவர், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் ஆறு மாதங்களாக பணிக்குத் திரும்பாத பரம்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.
Comments